World Travel GuidesUNESCO World Heritage Site அங்கோர் வாட்




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites

Translated into Tamil by Santhipriya




கம்போடியாவில் (Cambodia) அங்கோர் வாட் என்பது கட்டிடக் கலையின் அற்புதத்தைக் காட்டும் கட்டிடம். அன்று தழைத்து இருந்த மதத்தின் ஒரு அடையாளச் சின்னம். அதை சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டும். அங்கோர் வாட் என்றால் ஆலயமான நகரம் என்ற பொருள் உண்டு . அங்கோர் வாட் என்பது அந்த இடத்தின் உண்மையானப் பெயர் அல்ல, அந்த இடிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டபோது வைக்கப்பட்ட பெயரே. பதினாறாம் நூற்றாண்டில் இந்துக் கடவுளான விஷ்ணுவிற்காக கட்டப்பட பின்னர் அது தெரவாட புத்தர் மடாலயமாகி வாட் ("Wat") என்ற வார்த்தையை தன்னுள் சேர்த்துக் கொண்டது. சூர்யவர்மன் II என்பவரின் ஆட்சியில் கட்டப்படத் துவங்கிய அது அவர் மறைந்தப் பின்னரும் தொடர்ந்து கட்டப்பட்டது. அங்கோர் வாட் கட்டப்பட்டப் பின்னரும் வெளியில் இருந்த இடங்களின் சித்திர வேலைபாடுகள் தொடர்ந்து நடந்தாலும் ஆலயத்தின் உள்ளே சூர்யவர்மன் II ஆட்சியில் செதுக்கப்பட்ட சிற்பக் கலைகளை விட அவை சிறப்பாக அமையவில்லை. எகிப்து நாட்டின் பிரமிடுகளைப் போல இந்த இடத்தின் கட்டுமானப் பணியும் முடிய முப்பது ஆண்டுகள் ஆயிற்றாம். கட்டிடக் கலையின் நுணுக்கத்தைப் பார்த்தே அங்கோர் வாட்டின் பெருமையை அறிந்து கொள்ள முடியும். அங்கோர் வாட் பற்றிய தகவல்கள் : பன்னிரண்டாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் சூர்யவர்மன் II என்பவரின் ஆட்சியில் அது கட்டப்பட்டது. உள்ளே சென்று குறிப்பிட்ட இடத்தில் நின்றால் ஐந்து கோபுரங்களையும் ஒரே சமயத்தில் பார்க்குமாறு கட்டப்பட்டு உள்ளது. அதை சுற்றிப் பார்க்க எனக்கு இருபது நிமிடங்கள் பிடித்தது. சியம் ரிப்பிற்கு ( Siem Reap ) நான் பல முறை சென்று இருந்தபோது அங்கோர் வாட்டிற்கும் சென்றேன். ஆனாலும் என்னால் அனைத்தையும் பார்த்து விட்டதாக கருத முடியவில்லை. அத்தனை விஷயங்கள் உள்ளன. அங்குள்ள அனைத்து இடங்களையும் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க முடியாது. களைத்துப் போய் விடுவோம்.

ஆலய வளாகத்தின் பரப்பளவு

பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது
1113 முதல் 1150 ஆம் வரை ஆண்ட மன்னன் சூர்யவர்மனினால் கட்டப்பட்டு உள்ளது


அங்கோர் வாட் அமைந்துள்ள இடத்தின் அளவைக் கேட்டால் பிரமித்து விடுவீர்கள். அது அமைந்து உள்ள இடத்தின் மொத்த பரப்பளவு 210 ஹெக்டர். அங்குள்ள அகழியின் நீளம் 210 மீட்டர் . அங்குள்ள கோபுரம் ஒன்றின் உயரம் 65 மீட்டர் . அதை சுற்றி உள்ள சுவர்களின் நீளமோ 5.5 கிலோமீட்டர். ஆலயம் அமைந்துள்ள இடத்தின் அளவே 332 x 258 மீட்டர் ஆகும், அதாவது ஒரு விமானதளத்தின் பரப்பளவான சுமார் 9 ஹெக்டர் ஆகும்.



அங்கோர் வாட்


அங்கோர் வாட்டின் அமைப்பு

அங்கோர் வாட்டில் அமைந்துள்ள பெரும்பாலான ஆலயங்களின் வாசல் மேற்குப் பகுதியில் இருந்து நுழையும் வகையில் இருக்க அங்கோர் வாட்டிற்கு நாம் கிழக்குப் பகுதியில் இருந்தே செல்ல முடியும். ஆகவே அதை சூர்யவர்மன் ஈடுகாட்டு ஆலயமாக (funerary temple) கட்டி இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. அதன் காரணம் அதை சுற்றி அமைந்துள்ள சிலை வடிவங்கள் மற்றும் சின்னங்கள் ஈடுகாட்டுப் பகுதியில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றது. சில அங்கோர் ஆலயங்கள் கிழக்கு நோக்கிப் பார்த்தவாறு இருக்க, தாய்லாந்தில் பிமாய் (Phimai) எனும் இடத்தில் உள்ள ஆலயம் தென்கிழக்கை நோக்கியும், பிரயா விஹியர் (Preah Vihear) ஆலயம் வடக்கு பார்த்தவாறு உள்ளது. அங்கோரிலேயே பிரயா பித்து வில் உள்ள ஆலயம் (Preah Pithu) மற்றும் பிரயா கானில் ( Preah Khan) உள்ள விஷ்ணு ஆலயமும் கிழக்கை பார்த்தபடியே உள்ளன.

அங்கோர் வாட்டில் புகைப்படம் எடுக்க தகுந்த நேரம்

நீங்கள் எந்த மாதிரியான காமெராவை வைத்துக் கொண்டு இருந்தாலும் புகைப்படம் எடுக்க சிறந்த சமயங்கள் காலையில் சூரிய உதயம், நடுப்பகல் மற்றும் மாலை சூரியன் மறையும் நேரம் போன்றவை. அங்கோர் வாட்டின் முன்னால் பெரியதும் சிறியதுமான இரண்டு நீர் தேக்கங்கள் உள்ளன. காலை சூரிய உதயத்தின் போது இடதுபக்கம் உள்ள நீர் தேக்கத்தின் பக்கத்தில் நின்று கொண்டு இரண்டு கோபுரங்களுக்கு இடையே தெரியும் இடைவெளியில் படம் எடுக்கவும்..



மாலையில் அங்கோர் வாட்


சூரியோதயம் ஆன சில மணிக்குப் பின் (9:00am - 10:00am), அங்கோர் வாட்டிற்குச் சென்று விட வேண்டும். ஏன் எனில் வெளியில் உள்ள தரை கொதிக்கும். மெல்ல மெல்ல அனைத்து இடங்களையும் பார்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் முதலில் கிழக்குப் பகுதியின் வழியாக அங்கோர் வாட்டிற்குள் நுழைந்து விட வேண்டும். அங்கோர் வாட் கிழக்குப் பகுதியை நோக்கி அமைந்து உள்ளதினால் சூரிய ஒளிக்கு முன்னால் படம் எடுப்பது கடினம். ஆகவே மதியம் மூன்று மணிக்குப் பின்னர் அதன் மீது மின் ஒளியைப் போல விழும் சூரிய ஒளியில் அதை படம் பிடிக்கலாம். அப்போது ஆகாயம் நல்ல நீல நிறத்தில் இருந்தால் நீங்கள் அதிருஷ்டசாலி. படம் நன்கு அமையும். பொதுவாக நீல நிற ஆகாயம் தெளிவாக உள்ள காலமான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அங்கு சுற்றுலா செல்வது சிறந்தது.

அங்கோர் வாட்டிற்குள் செல்லும் பாதை



பாறைகளிடையே உள்ள பாதை வழியாக வந்து அங்கோர் வாட் கிழக்கு வாயில் கோபுரத்தின் முன் நின்றால் உள்ளே போகும் வழி எது எனக் குழப்பம் வரலாம். ஆகவே கீழே உள்ள வரை படத்தைப் பார்த்து வழியை புரிந்து கொள்ளுங்கள்.அநேகமாக எல்லோருமே ஆலயத்தின் உள்ளே நேராக நுழைந்து விடுவார்கள். நீங்களும் உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அப்படி செய்யலாம். நான் அங்கோர் வாட்டிற்கும் பலமுறை சென்று உள்ளேன். அங்குள்ள புல்வெளியில் காலை நேரம் சென்று அமர்ந்து கொண்டு சூரியோததைப் பார்க்க முயலுவேன். கோபுரத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிக்குச் செல்ல தூசி படிந்த பாதை உள்ளது. ( மேலுள்ள படத்தைப் பாருங்கள்) . என்னைப் போன்று அந்த இடத்தை பற்றி விவரம் சேகரிக்க வருபவர்களைத் தவிர அங்கெல்லாம் அதிகம் சுற்றுலா பயணிகள் இருக்க மாட்டார்கள்.

கோபுரத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிக்குச் செல்ல கீழுள்ள வார்த்தைகளில் கிளிக் செய்யவும்.

அங்கோர் வாட்டின் உள்ளே



மேற்கைப் பார்த்து உள்ள அனைத்து அங்கோர் ஆலயங்களிலும் பிரதர்ஷணமாக (clockwise) செல்ல வேண்டும். ஆனால் கிழக்கு நோக்கி அமைந்து உள்ள அங்கோர் வாட்டின் ஆலயத்தில் அப்பிரதர்ஷணமாக (anti-clockwise) செல்ல வேண்டும். விஷ்ணு மற்றும் புத்தர்களின் சிலைகள்:- ஆலயத்தின் நுழை வாயிலின் வலதுபுறத்தில் எட்டு கைகளைக் கொண்ட கம்பீரமான சிலை உள்ளது. அதைப் பார்க்கும்போதே அது முதலில் விஷ்ணுவின் சிலையாகவீருந்து இருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ( அப்போது அங்கு ஆண்டு வந்த மன்னன் இந்து மதத்தை சேர்ந்தவர். அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் மகாயான புத்த மதத்தை சேர்ந்த மன்னன் இருந்தார். இன்றோ கம்போடியாவில் தேரவாய புத்தர்களே அதிகம் உள்ளனர்) . ஆனால் அந்த சிலையின் தலையை மாற்றி புத்தரின் சிலையாக்கி விட்டார்கள். அந்த சிலையை இன்றும் கம்போடியாவின் பலர் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.


புத்தராக மாற்றப்பட்டுள்ள விஷ்ணுவின் சிலையை இன்றும் கம்போடியாவினர் வழிபட்டுச் செல்கிறார்கள்
© Timothy Tye using this photo


அங்கோர் வாட்டிற்குள் மகாயான புத்தர்கள் காலத்தில் புத்தர்களின் பல சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.
© Timothy Tye using this photo


சுவற்றில் செதுக்கப்பட்டு உள்ள சித்திரங்கள்:- அங்கோர் வாட்டில் நாம் இடப்புறத்தில் இருந்து வலப்புறமாகச் சென்றால் சுவற்றில் செதுக்கப்பட்டு உள்ள அற்புதமான க்ஹ்மேர்ஸ்சின் கலை வண்ணத்தைப் பார்க்கலாம். அப்படி அற்புதமான செதுக்கப்பட்டு உள்ள பல சித்திரங்களைப் பார்க்க அதிக நேரம் இல்லை என்றால் அங்கோர் வாட்டின் தென் பகுதியில் உள்ள குருஷேத்திர யுத்தம் (Battle of Kurukshetra) , சூர்யவர்மன் II னின் படை (The Army of Suryavarman II,) , யமனின் தீர்ப்பு ( Judgement of Yama) , கடலைக் கடைந்து அமிருதம் எடுத்தது (Churning of the Ocean of Milk) , போன்றவற்றை அவசியம் பார்க்க வேண்டும். கீழே உள்ளவற்றை கிளிக் செய்து அவற்றைப் பார்க்க அந்தந்த பக்கங்களுக்குச் செல்லவும்

அங்கோர் வாட்டின் மற்ற சித்திர கூடங்கள்:- அவற்றை எல்லாம் பார்த்தப் பின் அங்கோர் வாட்டின் உள்ளே உள்ள மற்ற புனித இடங்களுக்குச் சென்று அவற்றையும் பார்க்கவும்.

அங்கோர் வாட்டிற்குச் செல்வது எப்படி?

அங்கோர் வாட் சியம் ரிப்பில் (Siem Reap) இருந்து 5.5 கிலோ தொலைவில் உள்ளது. அந்த இடத்தை எந்த நிலையிலும் நீங்கள் அடைய முடியாமல் இருக்க முடியாது. உங்களுக்கு வழி புரியவில்லை என்றால் ஒரு டுக் டுக் (tuk tuk d) வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொளவும். அன்கோரில் உள்ள அனைத்து இடங்களைவிட மிகப் பெரியது அங்கோர் வாட். அந்த இடத்தில் நீங்கள் மணிக்கணக்காக இருந்தாலும் கூட பார்க்க வேண்டியவை அநேகம் மீதம் இருக்கும். உங்களுக்கு அந்த இடத்துக்குச் செல்ல நல்ல வண்டி வேண்டும் என்றால் நான் சென்ற வண்டி ஓட்டி திரு ஹான் என்பவரை தொடர்புக் கொள்ளவும்.

Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.





Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2011 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




"); pageTracker._trackPage