 பிமினகாஸ்


Translated into Tamil by Santhipriya
பாபுஹுவான் என்ற இடத்தில் இருந்து மன்னன் அரண்மனை வளாகத்தில் நுழைந்தால் அங்கு காணப்படுவதே பிரமிட் போன்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ள பிமீனகாஸ் (Phimeanakas) எனப்படும் வானத்து மாளிகை ("aerial palace").
இந்த ஆலயத்தில்தான் மன்னன் வந்து வழிபட்டானாம். அதில் தங்க கும்பம் இருந்ததாம். பதிமூன்றாம் நூற்றாண்டில் சீனாவை சேர்ந்த ஹௌ தகோன் (Zhou Daguan ) என்ற ராஜதூதர் அங்கு வந்தபோது பிமீனகாஸ் ஆலயம் தங்க கோபுரம் என அழைக்கப்பட்டதாம். அன்கோரில் உள்ள மற்ற ஆலயங்களைவிட இது சிறியது .
நான் அந்த இடத்தை என்னுடைய மனைவியுடன் சென்று பார்த்தேன். வெய்யல் சூட்டினால் அந்த இடம் சூடாக இருந்தது. ஏறுவதற்கு கடினமாக இருந்தது, ஆனால் இறங்குகையில் புகைப் படம் பிடிக்கும் கருவி மற்றும் பிற சாதனங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு சென்று இருந்ததினால் அவற்றின் எடையினால் இறங்குவது ஏறுவதை விட கடினமாக இருந்தது.
 பிமீனகாஸ் மீதிருந்து கஷ்டப்பட்டு இறங்கும் யாத்ரிகள்
மன்னன் ராஜெந்திரவர்மனே ( Rajendravarman II) பிமீனகாஸ் ஆலயத்தைக் கட்டத் துவங்கினார். அவருக்குப் பின்னர் வந்தவர்கள் அதில் மாறுதல்களை செய்தார்கள். ஹௌ தகோன் தந்துள்ள செய்தியின்படி அந்த ஆலயத்தின் வரலாறு என்ன என்றால் அந்த ஆலயத்தின் மேல் பகுதியில் ஒரு நாகம் இருந்ததாகவும், அது இரவில் பெண்ணாக மாறிவிடும், ஒவ்வொரு இரவும் அந்த நாட்டு மன்னன் அங்கு வந்து அந்த பெண்ணுடன் அந்த கோபுரத்தில் படுத்துக் கொண்டு இருக்க வேண்டும். அதன் பின்னரே அவன் தன்னுடைய மனைவியிடமோ அல்லது வேறு பெண்ணிடமோ செல்லலாம். அப்படி ஒரு இரவு செய்யத் தவறினாலும் கடுமையான தீய விளைவுகளை அவன் நாடு சந்திக்கும், அவனும் மரணம் அடைந்து விடுவான். அந்த கோபுரத்தில் இருந்த தங்க கலசம் அந்த நாகமே ஏற்படுத்தி இருந்தது. அந்த புராணக் கதையை அங்கிருந்த உள்ளூர் சீனர்களே அவருக்கு சொல்லி இருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த நம்பிக்கை க்ஹ்மேர் மக்களிடையே இல்லை.
ஆலய விவரம்
பத்தாம் நூற்றாண்டில், 941-968 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த மன்னன் ராஜெந்திரவர்மனே பிமீனகாஸ் ஆலயத்தைக் கட்டி உள்ளார்.
ஆலயத்துக்குச் செல்லும் வழி
ஆலயம் அங்கோர் தோமில் மன்னன் அரண்மனை வளாகத்தில் உள்ளது. பஹுவானின் வடக்குப் பகுதியில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த அரண்மனை வளாகத்தில் நுழைந்து விட்டால் உங்களால் அந்த ஆலயத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. ஏன் எனில் அங்குள்ள கட்டடங்களில் அதிக உயரமான பிரமிட் கட்டிடம் அதுதான் . ஒரு டுக் டுக் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கு செல்வது நல்லது .
 அங்கோர் தோமில் உள்ள பிமீனகாஸ் மீதிருந்து இறங்கும் வழி
 அங்கோர் தோமில் உள்ள பிமீனகாஸ் மீதிருந்து இறங்கும் வழி
 பிமீனகாஸ் மீது இருந்து காணப்படும் காட்சி
 பிமீனகாஸ் மீது டிம்
|