 பிரஸத் பெய்

Translated into Tamil by Santhipriya
பிரஸத் பெய் (Prasat Bei) என்றால் மூன்று கோபுரங்கள் என்று அர்த்தம். இது அன்கோரில் உள்ள ஒரு சிறிய புராதனச் சின்னம். இது பிரஸத் க்ராவானைப் ( Prasat Kravan) போல உள்ளது என்றாலும் இதில் மூன்று கோபுரங்கள் மட்டுமே உள்ளன. அதன் மத்திய கோபுரத்தில் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளது. மற்ற இரண்டு கோபுரங்களும் பழுதடைந்து, உடைந்து மத்திய கோபுரம் வரை செல்லும் வகையில் உள்ளன. அதில் வடக்குப் புறத்தில் உள்ள கோபுரம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை . அவை 24 மீட்டர் நீளமும் 9.6 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய பீடத்தின் மீது அமைந்து உள்ளது. பக்செய் சம்க்ரோங் ( Baksei Chamkrong ) என்ற இடத்துக்குச் சென்றுவிட்டு இங்கு நான் வந்தேன். அங்கிருந்து அங்கோர் தோமின் தென் பகுதியில் உள்ள கோபுரத்தின் பகுதிக்குச் செல்ல மேடான பாதை உள்ளது ..
ஆலய அமைப்பு
ஆலயம் கட்டப்பட்டது பத்தாம் நூற்றாண்டில். அதைக் கட்டியது 889 முதல் 915 வரை அரசாண்ட யசோவர்மன் என்ற மன்னன்.
ஆலயம் செல்லும் வழி
பிரஸாத் பெய் ஆலயம் பக்செய் சம்க்ரோங் மற்றும் அங்கோர் தோமின் அகழிகளுக்கு இடையே உள்ளது. அதாவது அங்கோர் தோமின் தென் பகுதியில் உள்ள கோபுரத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும் மற்றும் தமா பே கேயக் (Thma Bay Kaek ) எனும் இடத்தில இருந்து 175 மீட்டர் தூரத்திலும் உள்ளது .
 பிரஸாத் பெய் ஆலயம்
 பிரஸாத் பெய் ஆலயத்தின் மீது காணப்படும் ஜன்னல் கதவு
|