 பிரேயஹ் பாலிலே


Translated into Tamil by Santhipriya
அங்கோர் தோமின் மிகப் பழைமையான புராதனச் சின்னம் இது. பேயன் மற்றும் வடக்கு கேட்டின் இடையே வடக்கில் இருந்து தெற்கை நோக்கிச் செல்லும் பாதையில் இது அமைந்து உள்ளது.
டேப் பிரானாம் (Tep Pranam) என்ற ஆலயத்தின் பின்புறத்தில் செல்லும் பாதை மூலம் அங்கு செல்லலாம். அந்த பாதையில் சுமார் 150 மீட்டர் நடந்தால் சுமார் முப்பது மீட்டருக்கு எட்டு மீட்டர் ( 30 X 8 meter ) அளவிலான மேல் தளம் ஒன்றைப் பார்க்கலாம். அதன் நுழைவாயிலில் துவாரககாபாலர்கள் (dvarapalas) எனப்படும் இரண்டு காவலாளிகளின் சிலைகளில் ஒன்று தலை வெட்டப்பட்ட நிலையில் ஒன்றும் மற்றது குனிந்து கொண்டு உள்ள சிங்கமுமான உருவிலும் உள்ளன. உள்ளே ஒரு தாமரையில் அமர்ந்துள்ள புத்தரின் சிலை , டேப் பிரானானில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றது .
 பிரேயஹ் பாலிலேவை சுற்றிலும் காணப்படும் பஞ்சு மரங்கள்
பிரேயஹ் பாலிலேயில் புத்தரை தள்ளி உள்ளே ஒரு சுவர் உள்ளது. கிழக்கு புறமாக கதவு உள்ள கோபுரத்தை அங்கு காணலாம். முழுவதும் சிதைந்த நிலையில் கற் குவியலாக இருந்த அதை 1937 ஆம் ஆண்டு புதுப்பித்துள்ளார்கள். அந்த கோபுரத்தின் வாயிலில் புத்தரைப் பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளதைக் காணலாம். கோசம்பியை (Kosambi) விட்டு வெளியேறிய புத்தர் வந்து தங்கிய காட்டுப் பகுதியான பரிலியக்கா ("Parilyyaka") என்ற இடமே அது என்பதினால் அதற்கு பிரேயஹ் பாலிலே என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். அந்த கோபுரத்தின் பினால்தான் பிரேயஹ் பாலிலே உள்ளது. அதன் அருகில் பல பஞ்சு மரங்கள் உள்ளன. அங்குள்ள உலர்ந்த இலைகள் மீது நடக்கையில் அவை கடக் கடக் என உடையும் சப்தம் நமக்குக் கேட்கும்.
அங்கிருந்து நாம் தென்புறத்தில் உள்ள அரண்மனை வளாகத்தில் உள்ள பிமினிகாஸுக்கு (Phimeanakas) செல்லலாம்.
கட்டிட விவரம்
இந்த புனித இடம் ( sanctuary ) பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th Century) கட்டப்பட்டு உள்ளது. அங்குள்ள கோபுரம் பன்னிரண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டின் (12th to 13th Century) முற்பகுதியில் கட்டப்பட்டு உள்ளது.
பிரேயஹ் பாலிலேக்குச் செல்லும் வழி
பிரேயஹ் பாலிலே அங்கோர் தோமிற்கு உள்ளேயேதான் உள்ளது. பிமினகாஸ்சில் இருந்து 400 மீட்டர் தொலைவிலும், டேப் பிரனாமில் இருந்து 280 மீட்டர் தொலைவிலும் உள்ளது. பேயனில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்வதே சிறந்தது. It is best explored on foot, along with the other ruins in Angkor Thom. Get your tuk tuk driver to drop you at the Bayon, and walk around to explore the sights in Angkor Thom.
 பிரேயஹ் பாலிலே யின் மற்றொரு தோற்றம்
|