 ப்ரியஹ் பித்து (ஆலயங்கள் T, U, V, X and Y)


Translated into Tamil by Santhipriya
அங்கோரின் பிரியஹ் பித்து என்ற ஒரே இடம் T, U, V, X மற்றும் Y போன்ற என்ற ஐந்து ஆலயங்களை உள்ளடக்கிய ஒரே புராதான சின்ன இடமாக உள்ளது. அவை யானைகளின் மேல் தளம் (Terrace of the Elephants ) மற்றும் லேபர் மன்னனின் மேல்தளத்திற்கும் ( Terrace of the Leper King) எதிர்புறத்தில் சாலையின் மறு பக்கத்தில் உள்ளது. அந்த ஐந்து ஆலயங்களும் ஒரே மாதிரியான உருவில் இருக்க வேண்டும் என்று முதலிலேயே வடிவமைக்கப்படவில்லை என்றாலும் அவை அனைத்தும் ஐந்து மன்னர்களினால் வெவ்வேறு சமயங்களில் கட்டப்பட்டு இருந்திருக்க வேண்டும்.
ஆகவே அவற்றை தனித்தனியாக ஆராய்வதற்காக சரித்திர வல்லுனர்கள் அவைற்றை T ஆலயம் , U ஆலயம் , V ஆலயம் , X ஆலயம் மற்றும் Y ஆலயம் என பிரித்துக் கூறினார்கள். அவற்றில் X ஆலயம் புத்தர்களின் ஆலயம், மற்றவை அனைத்தும் இந்துக்களின் ஆலயங்கள். அந்த ஆலயங்களை முதலில் எவரும் சென்று பார்ப்பது இல்லை, அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்தப் பின்னர்தான் கடைசியாக நேரம் இருந்தால் அவற்றை பயணிகள் பார்வை இடுகின்றனர். நீங்கள் சிறிது நேரம் அற்புதமான சூழ்நிலையில் தங்க விரும்பினால் அந்த இடத்துக்கு ஒரு மாறுதலுக்காகவாவது செல்லலாம்.
நான் அந்த இடத்திற்கு நல்ல வெயில் காலமான பிப்ரவரியில் சென்றேன். சூய் யோக் (Chooi Yoke ) ஓய்வாக ஒரு மரத்தடி நிழலில் தங்க நான் வடக்கு கிளியங், வரிசையாக T ஆலயம், U ஆலயம், X ஆலயம் அடுத்து Y ஆலயம் என ஒவ்வொரு ஆலயத்தையும் ஆராய்ந்தப் பின் கடைசியாக வடக்கில் இருந்த V ஆலயத்தையும் சென்று பார்த்தேன்.
 பிரியஹ் பித்து ஆலயங்களில் ஒரு ஆலயம்
பிரியஹ் பித்துவில் இரண்டு ஆலயங்கள் ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டு உள்ளன. இரண்டுமே அங்கோர் வாட்டில் உள்ளதைப் போலவே மேற்கு நோக்கி பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளன. யானைகளின் தளத்தின் அருகில் உள்ளது T ஆலயம். அதன் பின் புறத்தில் உள்ளதே U ஆலயம். இரண்டுமே ஒரே அகழியினால் சூழப்பட்டு உள்ளது. U ஆலயத்தின் வடக்கில் 30 மீட்டர் தள்ளி Y ஆலயம் இருக்கின்றது. U ஆலயத்தின் மேற்கில் X ஆலயம் இருக்கின்றது. அதுவும் அகழியினால் சூழப்பட்டு உள்ளது. U ஆலயத்தின் வடக்குப் பகுதியில் V ஆலயம் இருக்கின்றது. ஆனால் அது அகழியினால் சூழப்படவில்லை. V ஆலயத்தின் கிழக்கே 70 மீட்டர் நீளமான மேட்டுச் சாலை உள்ளது.
ஆலய விவரம்
1113-circa 1150 காலத்தில் ஆண்ட சூர்யவர்மன் II மற்றும் 1181-1220 காலத்தில் ஆண்ட ஜெயவர்மன் VII இந்த ஆலயங்களை பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டி உள்ளனர்.
அங்கு செல்வது எப்படி
லேபர் மன்னனின் மேல் தளத்தின் மேற்கில் அங்கோர் தோமில் உள்ளது இந்த இடம். இது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படவில்லை என்பதினால் நீங்களே இதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
சாதரணமாக சுற்றுலா பயண திட்டத்தில் இதையும் சேர்த்து இருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் இதற்கு தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பஹுவனில் உள்ள உணவகத்தில் இருந்து ஒரு டுக் டுக் வண்டியைப் பிடித்து அங்கிருந்து செல்லலாம். அங்கிருந்து பார்த்தால் பிரசாத் சுயர் பிரட்டின் பன்னிரண்டு கோபுரங்கள் வலப்புறத்திலும் இடது புறத்தில் யானைகளின் தளமும் தெரியும். யானைகளின் தள சாலையில் இறங்கி வடக்குப் புறமாகச் சென்றால் லேபர் மன்னனின் மேல் தளம் தெரியும். அந்த இடத்துக்குச் சென்றப் பின் அதன் வலப்புறம் உள்ள பல மரங்களுக்கு இடையே பிரியஹ் பித்து தெரியும்.
 பிரியஹ் பித்துவில் U ஆலயம்
 பிரியஹ் பித்துவில் U ஆலயம்
 பிரியஹ் பித்துவில் U ஆலயம்
 பிரியஹ் பித்துவில் T ஆலயம்
 பிரியஹ் பித்துவில் T ஆலயம்
 பிரியஹ் பித்துவில் X ஆலயம்
 பிரியஹ் பித்துவில் Y ஆலயம்
|