 சிதைந்த நிலையில் உள்ள பெரிய புராதான சின்னங்கள் நீக் பின்


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
அன்கோரில் உள்ள ஆலயங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட ஆலயம் ‘நீக் பின்’ ("Neak Pean") என்பது. ‘க்ஹ்மேர்’ (Khmer ) மன்னன் கடைசியாகக் கட்டியது இது என்று கூறுகிறார்கள். அன்கோரில் கட்டப்பட்ட ஒரு ஏரியின் நடுவில் தீவு போன்ற இடத்தில் இது கட்டப்பட்டு இருந்தது . தற்போது அந்த ஏறி உலர்ந்து பாழும் நிலமாக அல்லது விவசாய நிலங்களாக மாறி உள்ளன. தன்னை சுற்றி உள்ள எட்டு குளங்களின் (eight pools) மத்தியில் எட்டு நாகங்கள் சூழப்பட்ட (encoiled nagas) நிலையில் அது காணப் படுகின்றது.
‘நீக் பின்’ என்றால் பின்னிக் கொண்டு உள்ள நாகங்கள் என்று அர்த்தம். அங்கு உள்ள தலையை பின்னிக்கொண்டு (heads entwined) உள்ள இரண்டு நாகங்களின் சிலையையே அப்படிக் கூறுகிறார்கள். அவற்றின் தலைப் பகுதி கிழக்கில் இருக்க, மேற்குப் பகுதியில் அவற்றின் வால்கள் காணப்படுகின்றன. அந்த நாகங்களை நாக மன்னர்களான ‘நந்தா’ (Nanda ) மற்றும் ‘உபானந்தா’ (Upananda) எனக் கூறுகிறார்கள்.
 நீக் பின்
நீல நிறமான ஆகாயம் இருக்க நான் ஒரு நாள் மாலையில் அதை படம் பிடித்தேன். அந்த இடத்துக்கு செல்ல மழைக் காலமே சிறந்தது எனக் கூறப்பட்டாலும் வெய்யில் மற்றும் மழைக் காலம் என இரண்டு காலங்களிலும் நான் சென்று உள்ளேன். வெய்யில் காலத்தில் சென்றால் பாழடைந்து கிடக்கும் அவற்றின் அருகில் சென்று பார்க்க முடிகின்றது. தண்ணீர் வற்றி உள்ள அந்தக் குளங்களில் பல உருவங்களில் திட்டு திட்டாக தண்ணீர் வெளிவரத் துவங்கும் அழகை காணலாம்.
கட்டிட விவரம்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th Century ) இரண்டாம் பகுதியில் 1181-1220 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் ஜெயவர்மன் II (Jayavarman VII ) அதைக் கட்டி உள்ளார்.
அங்கு செல்லும் வழி
‘பிரியாஹ் கானில் ‘(Preah Khan) இருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும் ‘டா சோமில்’ (Ta Som) இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. அதன் எதிர்புற சாலையில் உள்ளது ‘க்ரோல் கோ’ (Krol Ko) என்ற இடம்.
‘நீக் பின்’ எனும் இந்த ஆலயம் மிகவும் முக்கியமானது இல்லை, அதே நேரத்தில் பார்க்கக் கூடிய இடம். அங்கு செல்ல நீங்கள் ஒரு டுக் டுக் வண்டியைப் பிடித்துப் போகலாம்.
 நீக் பினில் தண்ணீர் வற்றி உள்ள குளம்
 நீக் பினில் பலாஹா எனப்படும் குதிரை
 நீக் பினில் பல உருவங்களில் திட்டு திட்டாக காணப்படும் தண்ணீர்
 நீக் பினின் மத்தியப் பகுதியில் காணப்படும் லோகேஸ்வராவின் சிலை
|