World Travel GuidesUNESCO World Heritage Site சிதைந்த நிலையில் உள்ள பெரிய புராதான சின்னங்கள்
பிரியாஹ் கான்




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites




Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா


அன்கோரில் (Angkor) சிதைந்த நிலையில் உள்ள உள்ள மிகப் பெரிய புத்த மடாலயம் ‘பிரயாஹ் கான் ‘( Preah Khan) என்ற ஆலயம் . மன்னன் ஜெயவர்மன் (Jayavarman) கட்டியதிலேயே மிகப் பெரிய கட்டிடம் அது. பிரியாஹ் கான் என்றால் 'புனிதமான வாழ்கை' என்று அர்த்தம். அந்த இடம் ஒரு ஆலயமாக அல்ல ஆயிரம் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு புத்த பல்கலை கழகமாக இருந்துள்ளது . அந்த இடத்தை ஆராய்ந்த சரித்திர வல்லுனர்களும் ஆராய்ச்சியாளர்களும் அந்த ஆலயத்தின் அடியில் புதைந்து கிடந்த கல்வெட்டின் குறிப்புகள் மூலம் அந்த ஆலயம் எப்படி நிர்வாகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை அறிந்தார்கள். யசோதவர்மன் II (Yasovarman II ) மற்றும் ‘திரிபுவனாதித்யவர்மன்’ (Tribhuvanadityavarman) என்ற மன்னர்கள் வசித்து வந்த அரண்மணையை பின்னர் தனது தந்தையான ‘தரணின்றவர்மன்’ (Dharanindravarman) என்பவரின் நினைவுக்காக ‘பிரியாஹ் கான்’ என்ற பெயரில் ஒரு ஆலயமாக வேறு ஒரு மன்னன் மாற்றினார். அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் மன்னன் ஜெயவர்மன் VII (Jayavarman VII) தனது தாயாரின் நினைவாக ‘த ப்ரோஹீம்’ (Ta Prohm) என்ற ஆலயத்தைக் கட்டி இருந்தார். அங்கோர் தோமில் தனது மாளிகையை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் சிறிது காலம் வரை மன்னன் ஜெயவர்மன் VII அந்த ‘பிரியாஹ் க்ஹான்னையே ‘தனது இருப்பிடமாகக் கொண்டு இருந்தார். 1920 ஆம் ஆண்டு முதல் ‘EFEO’ (École Française d'Extrême Orient ) எனப்படும் அமைப்பு நல்ல ஆதாரங்கள் கிடைத்த அழிந்த நிலையில் இருந்த புராதான சின்னங்களை மீண்டும் சீரமைக்க தம்மிடம் எடுத்துக் கொண்டது.’த ப்ரோஹீம்’ ஆலயத்தை எந்த அளவில் புதுப்பிக்க முடியும் என்பது புரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைகின்றார்கள் . ஆகவே அதை அங்குள்ள காட்டின் ஒரு பகுதியாகவே தொடரட்டும் என முடிவு செய்து விட்டு விட்டனர். அது போலவேதான் மூலை முடுக்குகளில் எல்லாம் தலைப் பகுதி, மற்றும் சுவர்கள் என பல இடங்களில் இடிந்து விழுந்துள்ள ‘பிரியாஹ் கானையும்’ அப்படியே விட்டு விட்டுள்ளார்கள்.



பிரயாஹ் கான் ஆலயத்துக்குள் வந்து விழும் சூரிய ஒளி


நான் இந்த இடத்திற்கு இரண்டு முறை சென்று உள்ளேன். 2002 ஆம் ஆண்டு முதலில் சென்றபோது அதை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் 2006 ஆம் ஆண்டு நான் மீண்டும் அங்கு சென்றபோது அதன் அனைத்துப் பகுதிகளையும் மனதாரப் பார்த்தேன். அன்கோரில் இரண்டு தளங்களைக் கொண்டு உள்ள ஓர் கட்டிடத்தையும் பார்த்தேன். அப்படிப்பட்ட கட்டிடம் அன்கோரில் இல்லை. அது ‘பிரயாஹ் கானின்’ அருகில் மேற்கு மூலையில் உள்ளது. அங்கு நீங்கள் சென்றால் அதை நன்கு ஆராய்ந்து விட்டு வரவும்.

கட்டிட விவரம்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th Century) ‘பிரயாஹ் கானைக்’ கட்டியவர் 1181 -1220 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த மன்னனான ஜெயவர்மன் VII (Jayavarman VII) என்பவரே.

பிரயாஹ் கானுக்குச் செல்லும் வழி

அந்த இடத்துக்கு செல்ல முதலில் ‘அன்கோர் தோமுக்கு’ போக வேண்டும். அதன் வடக்கு வாயிலில் இருந்து பயணியுங்கள். அங்கிருந்து 600 மீட்டர் தொலைவு சென்றதும் மேற்குப் பக்கமாக திரும்பி 300 மீட்டர் சென்று மீண்டும் அங்கிருந்து வடக்குப் புறமாக திரும்பி 250 மீட்டர் சென்றால் ‘பிரயாஹ் கானின்’ கிழக்குப் பகுதியை அடையலாம். அங்கு செல்பவர்கள் தம்மை ஒரு வாயிலில் இறக்கி வைத்துவிட்டு மறு வாயிலில் வந்து ஏற்றிக் கொண்டுப் போகுமாறு கூறுவார்கள். நீங்கள் தனியாகச் செல்ல விரும்பினால் ஒரு டுக் டுக் வண்டி மூலம் அங்கு செல்லலாம்.



பிரயாஹ் கானின் கிழக்குப் பகுதி



Inside Preah Khan.



பிரயாஹ் கானின் உள்ளே உள்ள பாதை



பிரயாஹ் கான் ஆலயத்துக்குள் செதுக்கப்பட்டு உள்ள சிற்பங்கள்



பிரயாஹ் கான் ஆலய கட்டிடங்கள்



பிரயாஹ் கான் ஆலயத்துக்குள் உள்ள ஸ்தூபி



பிரயாஹ் கானில் இரண்டு தளங்களைக் கொண்டு உள்ள கட்டிடம்



பிரியாஹ் கானில் கருடனைப் போன்ற உருவச் சிலையின் அருகில் டிம் மற்றும் சூய் யோக்


Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.





Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2011 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




"); pageTracker._trackPageview(); }