 சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் ஸ்ராஹ் ஸ்ரங்


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
'பண்டே க்டேய்'யின் (Banteay Kdei) கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டு உள்ள ஸ்ராஹ் ஸ்ரங் (Srah Strang ) என்ற நீர்த்தேக்கம் 900 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் உபயோகத்தில் உள்ளது. அங்கிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பது அற்புதமாக உள்ளது. 'பர் ருப்' (Pre Rup ) மற்றும் 'பிரசாத் பட் ' (Prasat Bat Chum) என்பவற்றைக் கட்டிய அதே கவிந்த்ரரிமாதனா (Kavindrarimathana ) என்பவரால் இது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் 'ஸ்ராஹ் ஸ்ரங்கை' மன்னன் ஜெயவர்மன் VII (Jayavarman VII ) சற்று மாற்றி புனரமைத்தார்.
இந்த நீர் தேக்கத்தின் தண்ணீர் குறையும்போது அதில் முழுகி உள்ள ஒரு புராதான ஆலயத்தின் இடிபாடுகள் வெளியில் தெரிகின்றன. ஆகவே அந்த ஏரியின் நடுவில் 'மேபனில்' (Mebon) இருந்ததைப் போன்ற பாதுகாப்பான இடம் இருந்து இருக்க வேண்டும் எனத் தெரிகின்றது.
 ஸ்ராஹ் ஸ்ரங்
இந்தப் படம் விடியற்காலையில் எடுக்கப்பட்டது. ' சிம் ரிப்பில்' (Siem Reap ) இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்த வேளையான விடியற்காலை இருட்டில் நாங்கள் அங்கு போய் சேர்ந்து விட்டோம் . எங்களுடைய வண்டியின் இரண்டு முன் விளக்கில் இருந்து வெளியேறிய வெளிச்சமே அந்த சாலையை ஒளி வெள்ளமாக்கியது. ஒரு சரியான இடத்தில் சென்று காத்திருந்தோம்.
சற்று நேரத்தில் அந்தப் பக்க ஏரிக்கரையில் இருந்து தண்ணீரில் சில மரங்களின் நிழல் அந்த இருட்டில் மெல்ல தெரியத் துவங்கியது. கருப்பான நிறத்தில் இருந்த ஆகாயம் மெல்ல நீல நிறத்தில் மாறி, அதில் பிங்க் மற்றும் சிவப்பு திட்டுக்களுடன் வெளி வரத் துவங்க அங்கிருந்த அனைவரும் அதைப் படம் பிடித்தோம். அந்த ஏரியின் தண்ணீர் சலனமில்லாமல் , அசையாமல் இருக்க அதில் தெரிந்த அந்த அற்புதமான சூரிய பிம்பத்தைப் படம் எடுத்தேன். அன்கோரில் நான் பார்த்த அற்புதமான ஒரே ஒரு காட்சி அது.
'ஸ்ராஹ் சரங்கின்' பரப்பளவு 700 மீட்டர் நீளமும் 350 மீட்டர் அகலமும் ஆனது. அந்த ஏரி மேற்குக் கிழக்காக அமைந்து இல்லாமல் சற்று தென்கிழக்கு மற்றும் தென் மேற்காக அமைந்து இருந்தது. அந்த ஏரியின் கிழக்குப்புறத்தில் நாகா கலை வேலைபாடுகள் அமைந்த தூணின் மீது சிங்கத்தின் சிலை உள்ளது. அங்கு நீங்கள் இருந்தால்தான் அற்புதமான புகைப்படத்தைப் பிடிக்க முடியும்.
கட்டிட விவரம்
பத்தாம் நூற்றாண்டின் (mid 10th Century) மத்தியப் பகுதியில் 1181-1220 காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் ஜெயவர்மன் VII என்பவரே இதைக் கட்டி உள்ளார்.
அங்கு செல்வது எப்படி
நீங்கள் சுற்றுலாப் பயணத் திட்டத்தின் மூலம் 'சிம் ரியப்பிற்கு' வந்திருந்தால் அவர்கள் இந்த இடத்துக்கும் உங்களை அழைத்துச் செல்வார்கள். இல்லை நீங்கள் தனியாக ஏற்பாடு செய்துகொண்டு வந்திருந்தால் 'சிம் ரிப்'பில் இருந்து 'அங்கோர் வாட்டுக்குச்' செல்லும் பாதையில் சென்று அங்குள்ள அகழியை அடைந்ததும் வலப்புறம் திரும்பவும். நேராகச் சென்று 'பிரசாத் காரவானைத்' தாண்டிச் சென்று வலப்புறம் திரும்பிச் சென்றால் அந்த சாலையின் வலப்புறம் 'பிரசாத் கரவனையும்' (Prasat Kravan ) , இடப்புறத்தில் 'சிம் ரியப்'பையும் காணலாம்.
 விடியற்காலையில் ஸ்ராஹ் ஸ்ரங்
 ஸ்ராஹ் ஸ்ரங் கில் சுற்றுலாப் பயணிகள்
|