World Travel GuidesUNESCO World Heritage Site சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள்
தொம்மனன்




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites




Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா


அங்கோர் வாட்டைக் கட்டிய அதே மன்னன்தான் ‘தொம்மனன்’ (Thommanon) ஆலயத்தையும் கட்டி உள்ளார். ‘தொம்மனனில்’ காணப்படும் சிற்பங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அது அங்கோட் வாட் (Angkor Wat) கட்டப்பட்ட காலத்தில்தான் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். தொம்மனனில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டே ‘அங்கோர் வாட்டும்’, ‘பாண்டே சம்ரேயும்’(Banteay Samre) கட்டப்பட்டு இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ‘தொம்மனன்’ ஒரே ஒரு கோபுரத்தைக் கொண்ட ஆலயம். அது கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. நுழை வாயிலும் கிழக்கில்தான் உள்ளது. உள்ளே நுழைந்தால் முதலில் வருவது கோபுரம், அதன்பின் மண்டபம், அதன் பின் முக்கிய அறைக்கு (கற்பக்கிரகம்) முன்னால் உள்ள சிறிய அறை, அதன் பிறகு மூல கோபுரத்தின் கீழுள்ள பிரசாத் எனப்படும் இடம் போன்றவை உள்ளன . 1960 ஆஅம் ஆண்டு ‘தொம்மனன்’ ஆலயத்தை பிரான்ஸ் நாட்டு வல்லுனர்கள் சீர்செய்தனர்.



தொம்மனன்


‘த நெய்’ (Ta Nei ) மற்றும் ‘சவு செ தேவோட’ (Chau Say Tevoda) என்ற இரண்டையும் ஆராய்ந்தபோது இந்த ஆலயத்துக்கும் நான் சென்று இருந்தேன். ‘சவு செ தேவோட’ மற்றும் தொம்மனன் என்ற இரண்டு ஆலயங்களையும் சூர்யவர்மன் II என்ற மன்னனே கட்டி உள்ளார்.

கட்டிட விவரம்

ஆலயம் பதினொன்று முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் (11th to first half of the 12th century ) கட்டப்பட்டு உள்ளது.

ஆலயம் செல்லும் வழி

தொம்மனன் ஆலயம் ‘சவு செ தேவோட’ ஆலயத்தின் எதிரில் உள்ளது. அதற்கு அங்கோர் தோம் அல்லது ‘த கியோவில் ‘(Ta Keo) இருந்து செல்லலாம். ‘த கியோவில்’ உள்ள வெற்றிக் கதவில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இது உள்ளது. ‘தொம்மனன்’ மிகவும் முக்கியமான ஆலயம் அல்ல என்றாலும் அதன் கலை நுணுக்கத்திற்காக அது பார்க்க வேண்டிய ஒன்று. நீங்கள் ஒரு டுக் டுக் வண்டியில் அங்கு செல்லலாம்.



சாலையில் இருந்து தொம்மனனின் காட்சி.


தொம்மனன்-மேற்கு கோபுரம் மற்றும் மதியப் பகுதி


தொம்மனன்-வாசகசாலை மற்றும் மேற்கு கோபுரம்


தொம்மனனின் முதல் நுழைவு மண்டபம்


Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.





Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2011 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




2741-3"); pageTracker._trackPageview(); } catch(err) {}