அன்கோரில் பல இடங்களிலும் சிதறி உள்ள புராதானச் சின்னங்கள் பண்டே -ஸ்ரெய்
Citadel of the Women, Ancient Ruins of Angkor, Cambodia


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
அன்கோரில் ‘க்ஹ்மேர்’ (Khmer ) எனும் இடத்தில் உள்ள ‘பண்டே ஸ்ரெய்’ மிக புராதான ஆனால் சிறிய ஆலயம். அற்புதமான கலைகளுடன் கூடிய ஆலயம் அது. ‘பண்டே ஸ்ரெய்’ என்றால் பெண்களின் கோட்டை என்று பொருள். ஆனால் ‘பண்டே ஸ்ரெய்’ என்பது பூர்வீகப் பெயர் அல்ல. ‘அங்கோர் வாட்’ (Angkor Wat) மற்றும் ‘பேயனுக்கு’ (Bayon) அடுத்தபடி கலை களஞ்சியம் மிக்க ஆலயம் இது. பிங்க் நிறக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டு உள்ளது .
இந்த ஆலய சித்திரக் கலையைப் பற்றி நிறைய பயணிகள் கேள்விப்பட்டு உள்ளதினால் இதைக் காண அதிக கூட்டம் வருகின்றது. அங்கோர் நகரில் இருந்து நிறைய தூரம் இருந்தாலும் சிம் ரிப்பில் (Siem Reap) இருந்து ஒரு மணி நேரத்தில் இதை அடையலாம். இது மிகப் பெரிய புராதான சின்னம் என்பதினால் அங்கு போனப்பின் இது சிறியதாக உள்ளதே என பலர் நினைக்ககூடும். ஆனால் சிறிதாக இருந்தாலும் இதன் அழகும் கலைவண்ணமும் மற்ற இடங்களை விட சிறந்து உள்ளது.
இந்த ஆலயத்தை பிரெஞ்ச் நாட்டினர் (French ) 1914 ஆண்டில் கண்டு பிடித்தனர். 1923 ஆம் ஆண்டில் அந்த இடத்தைத் தோண்டிக் கொண்டு இருந்ததாக ஒரு பிரெஞ்ச் நாட்டவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பல அறிய பொருட்கள் அவரிடம் இருந்து கைபற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
 பண்டே ஸ்ரெய் கோபுரத்தின் உட்புறப் பகுதிகள்
கட்டிட விவரம்
944-968 ஆண்டுகளில் ஆட்சி செய்து வந்த மன்னன் ராஜேந்திரவர்மன் II னால் (Rajendravarman II ) இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டில் (10th Century) கட்டப்பட்டு உள்ளது.
அங்குள்ள கல்வெட்டுச் செய்தியின்படி இந்த ஆலயம் அந்த மன்னன் மற்றும் அவருடைய சகோதரியால் 967 AD ஆண்டில் கட்டப்பட்டு உள்ளது என்பது தெரிகின்றது.
‘பண்டே ஸ்ரெய்’ ஆலயம் ‘திரிபுவனமகேஷ்வரா’ (Tribhuvanamaheshvara) என்றக் கடவுளுக்காக கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள சித்திரக் கலையைப் பார்த்தால் அது ‘க்ஹ்மேர்’ கலையின் அணிகலன் (Jewel of Khmer art) என்பது புலப்படும். ராவணன் ஒரு மலையை தூக்கிக் கொண்டு இருக்க அதன் மீது சிவபெருமான் அமர்ந்து உள்ளது போன்ற காட்சிகளைக் கொண்ட சித்திரங்கள் சிவனைப் போற்றும் விதத்தில் செதுக்கப்பட்டு உள்ளன. அதைத் தவிர கம்சன் வதம் (The Killing of Kamsa) , இந்திரன் பொழிந்த மழை (The Rain of Indra) போன்றக் காட்சிகளும் உள்ளன. அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு புகழ் பெற்ற காட்சிப் பொருட்கள் ‘பான் பேங்கில்’ (Phnom Penh) உள்ள ‘கம்போடியா தேசிய காட்சியகத்தில் ‘(National Museum of Cambodia) வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள ஜன்னல்களின் மேல் பிம்பங்களில் இந்திய புராணங்களின் பல காட்சிகள் இடம் பெற்று உள்ளன.
அங்குள்ள கல்வெட்டுச் செய்திகளின்படி பதினான்காம் நூற்றாண்டுவரை (14th century) ‘பண்டே ஸ்ரெய்’ நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்து உள்ளது.
2002 ஆம் ஆண்டு துவங்கி 2005 ஆம் ஆண்டு முடிய அந்த இடத்தை புதுப்பிக்கும் பணியில் சுவிசர்லாந்து நாட்டு அரசை (Swiss government) சேர்ந்த அப்சரா (APSRA ) என்ற நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளது. அந்த இடத்தைப் பாதுகாக்க மட்டும் அல்லது அதை சுற்றி உள்ள இடங்களை அழகுற வைத்திருக்க தேவையானவற்றையும் செய்து வந்து உள்ளது.
‘கபால் ஸ்பின்’ (Kbal Spean) என்ற இடத்துக்கு செல்லும் வழியில் நான் என் மனைவியுடன் இந்த இடத்துக்கு இரண்டாம் முறையாகச் சென்று பல புகைப் படங்களை எடுத்து வந்துள்ளேன்.
 பண்டே ஸ்ரெய் ஆலயத்தில் சிறிய அளவிலான பிரசாத் எனும் மண்டபங்கள்
 பண்டே ஸ்ரெய் ஆலயத்தின் மண்டபங்கள்
 சிறிய அளவிலான பண்டே ஸ்ரெய் ஆலயத்தின் காட்சி ஆச்சர்யமாக உள்ளது
 பண்டே ஸ்ரெய் ஆலயத்தின் மதியப் பகுதியில் உள்ள கோபுர மண்டபங்கள்
 பண்டே ஸ்ரெய் ஆலய சித்திரங்கள்
 பண்டே ஸ்ரெய் ஆலய மூலைகளில் பயங்கரமாக காட்சி தரும் உருவங்கள் உள்ளன.
 பண்டே ஸ்ரேயின் ஒவ்வொரு அங்குலமும் சித்திரக் கலையினால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
அங்கு செல்வது எப்படி
பண்டே ஸ்ரெய்யிற்கு செல்வதும் பண்டே சமரேயிற்கு செல்வதைப் போன்றதே . சிம் ரிப்பில் ( Siem Reap) இருந்து சுமார் பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மேபனுக்கு (East Mebon) செல்லும் பாதையில் செல்லவும். பர் ருப் (Pre Rup) மற்றும் மேற்கு மேபனுக்கு இடையே சாலையில் வரம் வலது புறத்தில் செல்லவும். அது கம்போடியாவின் (Cambodia) பிரதாக் (Pradak) என்ற கிராமத்துக்கு செல்லும் வழியாகும். அந்த சாலையில் வரும் ' T ' ஜன்ஷனில் இடதுபுறம் திரும்பவும். அதில் சென்றால் ப்னோம் பாக் (Phnom Bok) என்ற மலையைக் காணலாம்.
பிரதாக்கில் இருந்து 17.5 கிலோமீட்டர் தொலைவில் சாலை இரண்டாகப் பிரியும். அதில் இடதுபுறச் சாலையில் செல்லவும். சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பண்டே ஸ்ரெய் ( Banteay Srei ) கிராமம் வரும். அதைத் தாண்டி 800 மீட்டர் சென்றால் வரும் சிம் ரிப்பின் பாலத்தைக் கடக்கவும். அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் பண்டே ஸ்ரெய் ஆலயம் வரும்.
|