பேயன்


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா

அங்கோர் வாட்டிற்குப் பிறகு அன்கோரில் உள்ள மிகப் பிரபலமான புராதானச் சின்னமே பேயன் என்பது. க்ஹ்மேர் கலையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த இடமே மற்ற அனைத்தையும் விட அற்புதமானது என்பதில் சந்தேகமே இல்லை.
மன்னன் ஜெயவர்மன் VII (Jayavarman VII )என்பவரினால் கட்டப்பட்டுள்ள கடைசி ஆலயமே இது. இந்த ஆலயத்தைப் பார்க்கும் யாவருமே வியப்பு அடைவார்கள். இதை தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு மலையைப் போலவே தெரியும். ஆகவேதான் இதை மேரு மலையைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதைப் போலவே கட்டி உள்ளார்கள்.
அதன் அருகில் செல்லச் செல்ல அந்த மலை பல கல் சிலைகள் கொண்ட பெரும் மண்டபமாக உள்ளதைக் காண்பீர்கள்.
அங்கோர் தோமில் நுழைந்ததும் அந்தக் குவியலில் உள்ள அத்தனை கல் சிலைகளும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உங்களை நோக்கி பார்த்துக் கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்.
 தூரத்தில் இருந்துப் பார்கையில் ஒரு கல் குவியலைக் கொண்ட மலையைப் போல காட்சி தரும் பேயன்
நான் பேயனுக்குப் பல தடவை சென்று இருந்தாலும் அந்த இடம் என்னை வியப்புக்கு உள்ளாக்குகின்றது. அதில் பாறைக் கற்களினால் உருவாக்கப்பட்டு உள்ள 57 கோபுரங்கள் உள்ளன. அந்த புராதான சின்னத்தின் கட்டிடத்தில் அவலோகிதேஷ்வர (Avalokiteshvara) அல்லது புத்தா மற்றும் ஜெயவர்மன் VII ( Buddha and Jayavarman VII ) கலை நுணுக்கம் தெரிகின்றது. எது எப்படி இருந்தாலும் அங்கோரில் உள்ள புராதான சின்னத்தில் மிக அற்புதமான சின்னம் இதுதான்.
கட்டிடத்தின் விவரம்
ஆலயம் 1181-1220 காலத்தில் ஆட்சி செய்து வந்த மன்னன் ஜெயவர்மன் VII என்பவரினால் 12 முதல் 13 நாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த ஆலயத்தைப் பார்க்க வேண்டும் எனில் மேற்குப் பக்கத்தில் இருந்து செல்வதே சிறப்பாகும். நான்கு முக்கியப் பகுதிகளிலும் அதற்கு நுழை வாயில்கள் உள்ளன. அனைத்து ஆலயச் சுவர்களிலும் கலை வண்ணம் மிக்க சித்திரங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ளன. அவை பன்னிரண்டாம் நூற்றண்டின் (12th Century ) பல காட்சிகளை பிரதிபலிக்கின்றன. இன்றும் கம்போடியாவின் (Cambodia ) பல கிராமப் பகுதிகளில் கடை பிடிக்கப்பட்டு வரும் பழக்கங்களை அந்த சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன என்பதே உண்மை.
கடை வீதிகள், கோழிச் சண்டைகள், கடைகளில் சாமான்களை வாங்கும் makkal , விருந்துக்கான சமையல் செய்யும் காட்சிகள், செஸ் விளையாட்டு, போன்ற பல்வேறு அம்சங்களை அந்த சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன.
பேயனின் நுழைந்ததும் அங்கு இடிந்து விழுந்துள்ள சுவர்களின் பகுதிகள் , மற்றும் குறுகலான பாதையிலேயே செல்ல முடியும். கிசே சிதறி உள்ள அனைத்து இடங்களையும் பார்த்தப் பின் செங்குத்தாக உள்ள அந்த ஆலயத்தின் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அந்த திறந்த வெளியில் "ஜிக்ஜா பஸில்" ( jigsaw puzzle) என்பார்களே அப்படி ஒரு தோற்றத்தை அந்த கல் சிலைகள் உங்களுக்குத் தரும்.
அன்கோருக்குச் சென்றால் பேயனை காண்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். உண்மையிலேயே ஒரு அற்புதமான இடத்துக்கு சென்றுவிட்டு வந்த மன நிறைவும் ஏற்படும்.
 தூரத்தில் இருந்துப் பார்த்தால் பேயன் ஒரு கல் பாறையாழ் ஆனா மலையைப் போலவே காட்சி தரும்
 ஆலயத்துக்குச் செல்லும் நடைபாதையின் ஆரம்பத்தில் காணப்படும் காவல் சிங்கத்தின் சிலை
 இன்னொரு பகுதியில் காணப்படும் இரண்டு காவல் சிங்ககங்களின் சிலைகள்
 கீழ் பகுதியில் காணப்படும் கல் குவியல்கள்
 பேயனின் கீழ் பகுதியில் உள்ள அறையில் காணப்படும் லிங்க பீடம். ஆனால் லிங்கம் காணப்படவில்லை.
 உள்ளே செல்லும் பாதை குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது.
 இருட்டுப் பகுதிகளில் உள்ள இடங்களில் கூட அற்புதமான சித்திரங்கள் செதுக்கப்பட்டு உள்ளன
 செதுக்கப்பட்டு உள்ள ஒரு சிலை
 செதுக்கப்பட்டு உள்ள மற்றொரு சிலை நம்மைப் பார்த்து சிரிப்பது போல உள்ளது
 ஒரு சிலையின் முன்னால் நிற்கும் டிம்
அங்கு செல்லும் வழி
அங்கோர் தோமில் க்ஹ்மேர் நகரத்தின் மத்தியில் உள்ள இந்த இடத்துக்குச் செல்ல முதலில் அங்கோர் வாட்டை அடைய வேண்டும். அங்கிருந்து அங்கோர் தோமின் தெற்கு வாயிலை அடையலாம். அந்த வாயிலில் இருந்து பேயன் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு செல்ல டுக் டுக் வண்டியை எடுத்துக் கொள்ளலாம். .
|