 சிதைந்த நிலையில் உள்ள பெரிய புராதான சின்னங்கள் கிழக்கு மேபன்


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
'பர் ருப்'பைக் (Pre Rup) கட்டிய அதே மன்னனான ராஜேந்திரவர்மன் II னே 'கிழக்கு மேபனையும்' ( East Mebon) கட்டி உள்ளார். அந்த இரண்டு ஆலயங்களும் அனைத்திலும் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டு இருந்தாலும் அவற்றின் இடையே வித்தியாசம் என்ன என்றால் கிழக்கு மேபன் ஆலயம் 'கிழக்கு பாரே' (East Baray,) என்ற மிகப் பெரிய நீர் தேக்கத்தில் ஒரு தீவைப் போல அமைந்து இருந்ததுதான். அந்த நீர்தேக்கத்தின் பரப்பளவு 7 கிலோமீட்டர் தூரமும், 2 கிலோ மீட்டர் அகலமும் ஆனது.
 கிழக்கு மேபன் கோபுரங்கள்
பிரசாத் கவான்’ மற்றும் ‘பர் ருப்பிர்க்குப்’ போய்விட்டு ‘கிழக்கு மேபானுக்கு’ என்னுடைய மனைவியுடன் நான் சென்றபோது விடியற்காலை ஆகியது. அந்த ஆலயத்து சுவர்களில் இருந்த சித்திரங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்த மூன்று ஓங்கி உயர்ந்திருந்த கோபுரங்களில் இருந்த கதவுகளில் காணப்பட்ட சித்திர வேலைபாடுகள் மிக நுணுக்கமானவையாக இருந்தன.
ஆலய விவரம்
இந்த ஆலயமும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் 944-968 காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் ராஜேந்திரவர்மன் II (King Rajendravarman II ) னால் கட்டப்பட்டது.
கிழக்கு மேபான் ஒரு தீவில் கட்டப்பட்டு இருந்ததினால் அதற்குச் செல்லும் நிலப் பாதையோ, அகழியோ அமைக்கப்படவில்லை. ஆலயத்தின் நிலப் பரப்பு 126 மீட்டருக்கு 121 மீட்டர் ஆகும் . அதன் கிழக்குப் பகுதி நிலம் மேற்குப் பகுதியைவிட அதிகமாகவே இருந்தது.
அங்கு செல்லும் வழி
‘பர் ருப்பில்’ இருந்து அங்கு செல்லலாம். 'பண்டே சமரே' (Banteay Samre) மற்றும் 'பண்டே ஸ்ரெய்' (Banteay Srei) ஆலயங்களுக்குச் செல்லும் பாதையில் 'பர் ருப்'பில் இருந்து சுமார் 1.3 கிலோமீட்டர் சென்றப் பின் இடப்புறம் திரும்பி செல்லவும். கிழக்கு மேபன் கோபுரங்கள் எதிர்புறத்தில் இருந்து வந்தால் நீங்கள் 'த சோமைக்' (Ta Som) கடந்து இங்கு வரவேண்டும். உங்களுடைய சுற்றுலா பயண திட்டத்தில் இது இல்லை என்றால் நீங்களே அந்த ஆலயத்துக்கு ஒரு டுக் டுக் வண்டியில் செல்லலாம்.
 கிழக்கு மேபனில் காவலில் சிங்கங்களின் சிலை
 சுவற்றின் மூலைகளில் காணப்படும் யானைகளின் சிலை
 கிழக்கு மேபனின் தோற்றம்
 பிரசாத் எனப்படும் கோபுரங்களில் காணப்படும் அற்புதமான சித்திர வேலைபாடுகள்
 இன்னொரு பிரசாத்தில் காணப்படும் சிறு சிறு துளைகள். அது சண்டையில் போடப்பட்ட துப்பாக்கி தோட்டாவினால் ஏற்பட்டதா இல்லை இயற்கையினால் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
 பிரசாத்துக்கு உள்ளே புத்தரை வழிபடும் ஒரு பக்தர்
|