 சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் பிரசாத் பேட் சும்


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
அன்கோரில் ( Angkor) மிகச் சிறியதான இந்த 'பிரசாத் பேட் சும்' ( Prasat Bat Chum ) ஆலயத்துக்கு செல்வது கடினம். இதை மன்னன் ராஜெந்ரவர்மனுக்காக (Rajendravarman) கவிந்திரரிமாதனா (Kavindrarimathana ) என்ற கலைஞ்சர் கட்டி உள்ளார். இந்த கவிந்திரரிமாதனாவே ‘மன்னரின் அரண்மனை’, ‘கிழக்கு மேபன்’ (East Mebon) போன்றவற்றை வடிவமைத்ததும் இல்லாமல் 'பிரே ரியப்'பையும் ( Pre Rup) வடிவமைத்து இருந்திருக்க வேண்டும். க்ஹ்மேரில் இருந்த வல்லுனர்களில் அவர் பெயர் மட்டுமே தெரிய வந்துள்ளது. இவற்றைத் தவிர அவரே ‘ஸ்ராஹ் ஸ்ரான்கையும்’ (Srah Srang) வடிவமைத்து இருந்தாராம்.
'பிரசாத் பேட் சும்' எனும் ஆலயம் 'பிரசாத்' எனப்படும் மூன்று கோபுரங்களைக் கொண்டது. அவை கிழக்கு நோக்கிப் பார்த்தவாறு அமைந்து உள்ளன. 'ஸ்ராஹ் ஸ்ராங்' மற்றும் 'பிரசாத் கரவன்' பாதையில் நின்று கொண்டால் இந்த ஆலயத்தின் கோபுரங்கள் தெரியும்
 பிரசாத் பேட் சும்
நான் அங்கு சென்று இருந்த போது வடக்கு திசையில் இருந்த பிரசாத் சீரமைப்புப் பணியில் இருந்ததினால் சுற்றிலும் ஒரே தூசி மயமாக இருந்தது. செங்கல் கோபுரத்தில் கல்லினால் ஆன கதவுகளை தாங்கும் பட்டைகள் (Frame) , ஜன்னல்கள் (lintels) மற்றும் அதன் மீதான எண்கோண விட்டங்கள் (octagonal colonettes) இருந்தன. ஒவ்வொரு கோபுரத்திலும் அதைக் கட்டியவரைப் புகழ்ந்து பலரால் எழுதப்பட்டிருந்த பாடல்கள் செதுக்கப்பட்டு இருந்தனவாம். அதைப் போலவே அந்த மூன்றிலும் மிருகங்களைக் கொண்டு வந்து அந்த இடத்தை பாழடிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை தந்த சுவர் பலகைகள் இருந்தனவாம் .
கட்டிட விவரம்
பத்தாம் நூற்றாண்டின் (10th Century) 944-968 காலத்தில் இந்த இடத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் ராஜெந்ரவர்மனுக்காக கவிந்திரரிமாதனா என்பவரால் இது கட்டப்பட்டு உள்ளது.
அங்கு செல்லும் வழி
இது 'ஸ்ராஹ் ஸ்ரான்கின்' தென் பகுதியில் 400 மீட்டர் தொலைவில் உள்ளது. 'பிரசாத் கரவனில்' ( Prasat Kravan) இருந்து வந்தால் 300 மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து வந்து வலப்புறம் திரும்பி நடந்து அதே பாதையில் மீண்டும் இடப்புறம் சென்றால் இந்த இடத்தை அடையலாம்.
 பிரசாத் பேட் சும்மில் சிங்கத்தின் சிலை
 பிரசாத் பேட் சும்மின் ஜன்னலின் மேல் பகுதி
 பிரசாத் பேட் சீரமைப்புப் பணி
|