World Travel GuidesUNESCO World Heritage Site சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள்
பிரசாத் காரவன்




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites




Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா


அன்கோரில் (Angkor) செங்கலினால் கட்டப்பட்டு உள்ள 'பிரசாத் கரவன்' (Prasat Kravan) அற்புதமான, தனித்தன்மைக் கொண்ட கலைவண்ணத்தில் உள்ள ஆலயம். அதன் அர்த்தம் ஏலக்காய் திரவியம் சூழ்ந்த இடம். நான் இந்த இடத்துக்குப் பலமுறை சென்று இருந்தாலும் ஆகாயம் நல்ல நீல நிறமாக இருந்தபோது இந்த பயணத்தில் நான் எடுத்த படத்தை கீழே பாருங்கள். 'பிரசாத் காரவன்' என்பது பிற்காலத்தில் வந்தப் பெயர். அங்கு இருந்த மிகப் பெரிய ஏலக்காய் மரத்தினால் அந்தப் பெயர் வந்துள்ளது. ஹர்ஷவர்மன் I அல்லது இஷானவர்மன் II (Harshavarman I or Isanavarman II) அரசாண்ட காலத்தில் அது அரசாங்க அதிகாரிகளினால் கட்டப்பட்டு இருக்க வேண்டும். அப்படி கட்டப்பட்ட இரண்டு ஆலயங்களில் 'பிரசாத் நியாங் க்மு' (Prasat Neang Khmau) எனும் இரண்டாவது ஆலயம் 'ப்னோம் பேங்கில்' உள்ளது. 'பிரசாத் காரவன்' மற்றும் 'பிரசாத் நியாங் க்மு' என்ற இரண்டு ஆலயங்களுமே விஷ்ணுவிற்காக கட்டப்பட்டுள்ளது.



பிரசாத் கரவன்

'பிரசாத் கரவன்' வடக்கில் இருந்து தெற்காக ஐந்து உயர்ந்த கோபுரங்களைக் கொண்டு உள்ளது. ஒரு உயர்ந்த பீடத்தின் மீது அவை அனைத்தும் ஒரே வரிசையாக கிழக்கு நோக்கிப் பார்த்தபடி அமைந்து உள்ளன. இன்று தெற்குப் பகுதியிலும் நடுவில் உள்ளது மட்டுமே 1960 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு அங்கு பயணிகள் பார்க்கும் நிலையில் உள்ளது. மற்றவை இடிபாடுகளுடன் உள்ளன. புதுப்பிக்கப்பட்டு உள்ள அந்த இரண்டு கோபுரங்களிலும் உபயோகிக்கப்பட்டு உள்ள புதிய செங்கல்களில் CA (Conservation Angkor) என்ற எழுத்து காணப்படுகின்றது. தற்போது அந்த இடம் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தில் இருந்த செங்கல்களை ஒட்ட வைக்க சிமெண்டை பயன்படுத்தி இருக்கவில்லை. மாறாக ஒரு வித மரப் பிசினையே பயன் படுத்தி உள்ளார்கள். அந்த மேற்பகுதித் தூண்களையும் மேல்வளைவுகளில் உள்ள கலைநயம் மிக்க சித்திர வேலைபாடுகளை பாருங்கள். அவை செங்கலினால் இல்லாமல் வேறு வண்ணத்தில் மினுக்கும் பாறைக் கல்லினால் கட்டப்பட்டு உள்ளது. அதில் விஷ்ணு, ஒரு நாகத்தைக் கவ்விக் கொண்டுள்ள கருடன் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த ஐந்தில் வடக்கு மற்றும் நடுவில் உள்ள 'பிரசாத்தில்' மட்டும் உள்ளே வேலைபாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நடுவில் உள்ள கோபுரத்தின் உள்ளே உள்ள மூன்று சுவர்களில் ஒன்றில் விஷ்ணு வாமன அவதாரத்தில் கடல் மீது நடப்பது போலவும், கடல் அலைகளை வரிவரியான கோடுகளின் மூலமும் காட்டி உள்ளனர். அதற்கு எதிரில் உள்ள சுவற்றில் எட்டு கைகளுடன் உள்ள விஷ்ணுவும், மற்றொரு சுவற்றில் கருடன் மீது விஷ்ணு அமர்ந்து கொண்டு தனது கைகளில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலரை ஏந்தி உள்ளது போலவும் சிற்பங்கள் அமைந்துள்ளன. வடக்கில் உள்ள கடைசி பிரசாதிலும் சுவர்களில் பல வேலைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் லஷ்மி தனது கைகளில் தமது சின்னங்களைக் ஏந்திக் கொண்டு உள்ளது போலவும் அவள் பாதங்களில் அவளுடைய உதவியாளர்கள் விழுந்து வணங்குவது போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.



பிரசாத் காரவனின் இன்னொரு தோற்றம்



முன் பக்க மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் பிரசாத் காரவனின் தோற்றம்



'பிரசாத் கரவனின் முன்புறத் தோற்றம்



உள்ளே இருந்து மேலே பார்த்தால் தெரியும் செங்கல்களினால் மூடப்படாத வெற்றிடம்



விஷ்ணு கடல் மீது நடக்கும் காட்சி



உள்ளே உள்ள சுவற்றில் காணப்படும் விஷ்ணுவின் பல காட்சிகள்



நுழை வாயில் சுவற்றில் செதுக்கப்பட்டு உள்ள குறிப்புக்கள்



செங்கல்களில் காணப்படும் CA என்ற எழுத்து


கட்டிட விவரம்

பத்தாம் நூற்றாண்டில் (10th Century) 910-923 காலத்தில் ஆட்சியில் இருந்த இதை மன்னன் ஹர்ஷவர்மன் I என்பவர் கட்டி உள்ளார்

அங்கு செல்லும் வழி

'சிம் ரிப்பில்' இருந்து சென்றால் 'பண்டே கடியை ' (Banteay Kdei ) அடைந்து அங்கிருந்து 'அங்கோர் வாட்டிற்குச்' ((Angkor Wat)) செல்லும் பாதையில் செல்லுங்கள். அங்கோர் வாட்டின் அகழியை (Angkor Wat moat) அடைந்ததும் வலப்புறம் திரும்பிச் சென்றால் சிறிது தூரத்திலேயே இந்த இடத்தை அடையலாம். அநேகமாக அனைத்து டுக் டுக் வண்டிக்காரர்களுக்கும் இந்த இடத்துக்குச் செல்லும் வழி தெரியும்.


Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.





Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2011 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




"); pageTracker._trackPageview(); } catch(err) {}