World Travel GuidesUNESCO World Heritage Site சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள்
'த னெய்'




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites




Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா


'த னெய்' (Ta Nei) என்ற பாழடைந்த ஆலயம் அன்கோரில் (Angkor ) அடர்ந்த காட்டுக்குள் உள்ளது. ‘கிழக்கு பேரே’ (East Baray) என்ற இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. நானும் என்னுடைய மனைவியும் காட்டுக்குள் இருபது நிமிடங்கள் பேசிக்கொண்டே நடந்து சென்றோம். தற்போது அந்த ஆலயத்தையும் பழுது பார்க்கப்படும் பணி துவங்கி உள்ளதாகத் தெரிகின்றது.



அடர்ந்த காட்டுக்குள் உள்ளது 'த னெய்' ஆலயம். அதை ஆராயும் வல்லுனர்கள் அங்கு வைத்தது உள்ள காற்று அடிக்கும் திசையை காட்டும் கருவியை பார்க்க முடிகின்றதா?


'த னெய்' ஆலயம் பல முறை பெரியதாக்கப்பட்டு உள்ளது. முதலில் 35 மீட்டர் நீளமும் 26 மீட்டர் அகலமுமாக இருந்த ஆலயம் பிறகு 46 மீட்டர் நீளமாக்கப்பட்டு , அதன் பின் மீண்டும் 55 மீட்டர் நீளமும் 47 மீட்டர் அகலத்திலுமாக விரிவாக்கப்பட்டு உள்ளது. மூல கோபுரம் கிழக்கு பார்த்தபடி உள்ளது. அதைத் தவிர கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் ஆலய வெளிச் சுவருக்கு உள்ளே இன்னும் கோபுரங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தால் அனைத்து இடத்திலும் கற் குவியலாகவே காணப்படுகின்றது. இந்த ஆலயம் மற்ற ஆலயங்களில் இருந்து மாறுபட்டே உள்ளது. ஆனால் அதைப் பார்க்கையில் எனக்கு 'த ப்ரோம்' (Ta Prohm) மற்றும் 'பிராஹ் கான்' (Preah Khan) என்ற ஆலயங்களின் நினைவே வந்தது. அந்த ஆலயத்தின் மேல் பகுதி வரை படர்ந்து வளர்ந்துள்ள பஞ்சு மரங்கள் பார்க்கவே ரம்யமாக உள்ளது.

ஆலய விவரம்

மன்னன் ஜெயவர்மன் VII னினால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th century) ஆலயம் கட்டப்பட்டு உள்ளது.

அங்கு செல்லும் வழி

'த னெய்' ஆலயம் உள்ள இடம் பலருக்கும் தெரிந்து இருக்கவில்லை. ஆகவே அது சுற்றுலா பயணத் திட்டத்தில் இணைத்து வைக்கவில்லை. ஆனால் எங்களை அழைத்து வந்த டுக் டுக் வண்டி ஓட்டிக்கு அனைத்து இடமும் தெரிந்து இருந்தது. அவர் இல்லை என்றால் எங்களால் அந்த இடத்தைக் கண்டு பிடித்து இருக்க முடியாது. ஆனாலும் நானும் என் மனைவி சூய் யோக்கும் (Chooi Yoke) நடந்தேதான் செல்ல வேண்டி இருந்தது. 'த னெய்' ஆலயம் உள்ள இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் முதலில் 'த கியோவுக்கே' (Ta Keo ) செல்ல வேண்டும். இந்த ஆலயத்துக்குச் செல்லும் பாதை இரண்டாகப் பிரிகின்றது. அவற்றில் வலதுபுறம் செல்லும் பாதை ' Ta ப்ரோம்' ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் நம்மை அழைத்துச் செல்லும். ஆகவே இடதுபுரச் சாலையில் சென்று 'த கியோவை' (Ta Keo) அடைந்து அங்கிருந்து நேராகச் செல்லும் பாதையில் சென்றால் இந்த ஆலயம் வரும்.



கிழக்குப் பகுதியில் இருந்து காணப்படும் 'த னெய்' ஆலயம்


'த னெய்' ஆலயத்தின் உள்ளே


Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.





Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2011 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




1-3"); pageTracker._trackPageview(); } catch(err) {}