 சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் த ப்ரோம்


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
அங்கோர் சிதைவுகளில் மிகப் பெரியது 'த ப்ரோமில்' ( Ta Prohm) உள்ள மடாலயம் . ஆனால் அதை ஆராய்ந்து வரும் எபோ (École Française d'Extrême-Orient) என்ற அமைப்பின் வல்லுனர்கள் அந்த சிதைவை மாற்றாமல் அப்படியே விட்டு விடுமாறு பரிந்துரை செய்து உள்ளார்கள். அந்த கட்டிடத்தைப் பார்க்கையில் 'ஜங்கிள் புக்' ("Jungle Book") என்ற புத்தகக் கதையின் ஒரு காட்சியைப் பார்கின்றோமோ என்பது போல அத்தனை மோசமான நிலையில் உள்ளது.
அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ள கட்டிடத்தின் மீது ஓங்கி வளர்ந்து உள்ள மரங்களின் கிளைகள் பின்னி உள்ளன. அந்த இடத்தில் இரண்டு வகைகளிலான மரங்கள் வளர்ந்து உள்ளன. அவை 'சைபா பென்டன்ற' (Ceiba pentandra) என்ற சில்க் பஞ்சு மரம், மற்றது 'பிக் பிக்ஸ் கிப்போச'(fig Ficus gibbosa) எனப்படும் அத்தி மரம். இந்த மரத்தின் பல கிளைகள் மற்ற மரங்களின் மீதும் படர்ந்து அவற்றுடன் சேர்த்து தன்னை பின்னிக் கொண்டு உள்ளது. மேலும் இதன் அடிப்பாகம் மிகவும் கனமானது, தடிமனானது .
'டோம்ப் ரைடர்' (Tomb Raider ) போன்ற படங்களிலும் இடம் பெற்றுள்ள இந்த சிதைவை பார்க்கையில் நமக்கு அடர்ந்த காட்டில் பாழடைந்த கட்டிடத்தைப் பார்ப்பது போல உள்ளது.
 த ப்ரோம்
மன்னன் ஜெயவர்மன் VII னின் (Jayavarman VII) மிகப் பெரிய திட்டப் பணி இது. இந்த புத்த மடாலயம் மன்னன் ஜெயவர்மன் VII னின் தாயாருக்காகக் கட்டப்பட்டது. அதற்கு முன் இதே மன்னன் தனது தந்தையின் நினைவுக்காக 'பிரயாஹ் கானைக்' கட்டினார். ‘த ப்ரோமின்’ உண்மையானப் பெயர் ‘ராஜவிஹாரா’ (Rajavihara) . அதாவது மன்னனின் மடாலயம் (King's Monastery) என்பதே.
நான் இந்த இடத்தை பல முறை சென்று பார்த்து உள்ளேன். ஆனால் அதில் காணப்படும் வழிகளில் குறித்து வைத்துக்கொண்டு செல்லவில்லை என்றால் நாம் வந்த வழியை முற்றிலும் மறந்து விடுவோம் என்ற அளவுக்கு காணப்படும் சிக்கலான இடம் அது.
அங்கு காணப்படும் கல்வெட்டு மூலம் நமக்கு அந்த மடாலயத்தைப் பற்றிய செய்தி கிடைக்கின்றது. அதில் காணப்படும் செய்தியின்படி அந்த மடாலயம் மிகப் பெரியது. அதைக் கட்டும் பணியில் 79,364 பேர்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் பண்டிதர்கள் 8 பேர் , 2740 அதிகாரிகள் , 2202 உதவியாளர்கள் , மற்றும் 615 நடனக் கலைஞ்சர்கள் இருந்தனர்.
 த ப்ரோமின் கிழக்கு கோபுரம்
அந்த ஆலயத்தின் சொத்துக்களில் 500 கிலோ தங்க தட்டுக்கள் , 35 வைரங்கள் , 40620 முத்துக்கள் மற்றும் வேறு பல விலை மதிப்பில்லாத பொருட்கள் இருந்தன.
‘த ப்ரோமில்’ தாழ்வான ஆனால் நீளமான கட்டிடங்கள் , அவற்றை ஒன்று இணைக்கும் நீண்ட தாழ்வாரம் போன்றவை உள்ளன. அந்த கட்டிடத்தின் அனைத்து இடங்களும் ஒரு கிலோ மீட்டர் தூரமும், 0.7 கிலோமீட்டர் அகலமுமான பரப்பளவில் உள்ளன. அதன் வெளிச் சுவர்கள் ஒரு புறத்தில் பண்டே கடேய்யையும் (Banteay Kdei) இன்னொன்று 'த ப்ரோமின்' சாலையையும் தொடுகின்றன.
சாதாரணமாக சுற்றுலா பயணிகள் மேற்கு பக்க வாசல் மூலமே அங்கு நுழைகின்றனர். காரணம் அங்குதான் உணவகங்களும், ஞாபகார்த்தப் பொருட்கள் (souvenir stalls ) விற்பனைக் கடைகளும் உள்ளன. ஆனால் மேற்குப் பக்க வாசல் மூலமும் செல்ல வழி செய்யப்படப்பட்டு உள்ளது.
 மேற்குப் பக்க வாசலில் இருந்து த ப்ரோம் செல்லும் வழி
கட்டிட விவரம்
பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து பதிமூன்றாம் நூற்றாண்டின் (12th to the early 13th Century ) 1181-1220 காலத்தில் அரசாண்ட மன்னன் ஜெயவர்மன் VII இந்த மடாலயத்தைக் கட்டி உள்ளார்.
அங்கு செல்லும் வழி
அங்கோரில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா இடம் இது. அனைத்து டுக் டுக் வண்டி ஓட்டிகளுக்கும் அந்த இடத்துக்குப் போகும் வழி தெரியும். அங்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. 'த ப்ரோமில்' இருந்து செல்லலாம். இல்லை என்றால் 'பண்டே க்டேய்யில்' இருந்தும் அங்கு செல்ல முடியும்.
'பண்டே க்டேய்யில்' இருந்து சென்றால் 'பண்டே க்டேய்' மற்றும் 'ஸ்ராஹ் சரங்' செல்லும் வழியில் உள்ள டி (T) ஜன்க்ஷன் வரை செல்லவும். அந்த இடத்தின் இடப்புறம் 'பண்டே க்டேய்யை' தொட்டபடி உள்ள சுவரும், சற்று தொலைவு சென்றால் வலப்புறம் 'த ப்ரோமை' தொடும் சுவரும் இருப்பதைக் காணலாம். அங்கிருந்து செல்லும் சிறிய பாதை மூலம் கிழக்குப் பக்க வாசலை அடையலாம். நீங்கள் மேற்குப் பக்க வாசல்வழியாகச் செல்ல விரும்பினால் அதே சாலையில் என்னும் சிறிது தூரம் சென்று வலப்புறம் திரும்ப வேண்டும். அந்த சாலையில் சென்றால் மேற்கு வாசலை அடையலாம். அங்கு உணவகங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளதைக் காணலாம்.
அங்கோர் தோமில் இருந்து சென்றால் த கியோவைத் தானிச் செல்ல வேண்டும். அதே சாலை தெற்குப் பக்கத்தில் வலது புறமாக திரும்பும். அதில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் மேற்குப் பகுதியை அடையலாம்.
 த ப்ரோமில் இருந்து வளர்ந்து உள்ள சில்க் பஞ்சு மரங்கள்
 இடிபாட்டுக் கட்டிடத்தின் மீது அமர்ந்து உள்ள மரங்கள்
 அங்குள்ள கோபுரங்கள்
 ஆலயத்தை பின்னி உள்ள அத்தி மரம்
 காட்டு ஆலயம்
 த ப்ரோமின் கிழக்குப் பகுதி
|